சகித்தவர்கள்...

28 Nov 2011

காரணப்பெயர்...


"மூக்கு அப்புடியே அப்பா மாதிரி...
சிரிப்புல பாட்டி சாயல் தெரியுதுல்ல...
இந்த தலைமுடிய பாரு...
கோரக்கோரயா தாத்தா மாதிரி...
கண்ணு ரெண்டும் அச்சுப்பிசுங்காம
அம்மாவ உரிச்சு வெச்சுருக்கு..."
என்று உன் அழகு அனைத்திற்கும்
ஒருவரைக் காரணம் காட்டிவிடும்
ஊராருக்கு தெரிய வாய்ப்பில்லை
நான் 'அம்முகுட்டி' என்றுனை
அழைக்கும்போது
நீ பிரகாசித்துவிடும் அந்த
வெட்கம் மட்டும்
பழைய காதலி சாயலென்று...

14 comments:

எனக்கு பிடித்தவை said...

கவிதை நன்று ..

ரெவெரி said...

யோவ்..வில்லாதி வில்லனே...கவிதை..சிந்தனை...கலக்கல்...

C.Madhumitha said...

haha nalla kavidai!

Anonymous said...

intha pazhaya kadhali pathi ezhuthurathu irukatumm sir...puthu kadhali azhakai pathi adutha kavithai la solunga...k va

thaenmozhi said...

அப்போ இந்த ‘பொம்மு குட்டி’, ‘புஜ்ஜி குட்டி’ –லாம் யாரு..?!! ;)

மயிலன் said...

எனக்கு பிடித்தவை said...
#கவிதை நன்று .#

நன்றி தோழரே...

மயிலன் said...

ரெவெரி said...
#யோவ்..வில்லாதி வில்லனே...கவிதை..சிந்தனை...கலக்கல்..#

என்ன இப்புடி பொசுக்குன்னு நம்மள வில்லனாக்கிட்டீங்க?

மயிலன் said...

thaenmozhi said...
#அப்போ இந்த ‘பொம்மு குட்டி’, ‘புஜ்ஜி குட்டி’ –லாம் யாரு..?!! ;#

விண்ணைத்தாண்டி வருவாயா பாணியில்..."என்னோட அடுத்த கவிதைல சொல்றேன்..."...:)

Philosophy Prabhakaran said...

தல... ரெண்டு பர்சனல் நண்பிகள் பின்னூட்டம் போட்டிருக்காங்க போல...

என்னமோ நடக்குது... ம்ம்ம்...

மயிலன் said...

நீ ஏன்யா கத்துற?......:)

முனைவர்.இரா.குணசீலன் said...

நயமாகப் பதிவு செய்யப்பட்ட காதல்கவிதை..

மயிலன் said...

மிக்க நன்றி முனைவரே...வருகைக்கும் உங்கள் வரிகளுக்கும்..

cheena (சீனா) said...

அன்பின் மயிலன் - யாருக்கும் தெரியாத “அம்முக்குட்டி” என்று அழைக்கும் போது ஏற்படும் சுகம் - நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. காதல் இரசம் சொட்டுகிறது. நட்புடன் சீனா

cheena (சீனா) said...

தேர்ந்தெடுத்த படமும் அருமை - விக்டனில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் - நட்புடன் சீனா